மதுரை: மதுரை எம்பி சு.வெங்கடேசன், தனது எக்ஸ் வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது: வங்கிகளில் வீடு கட்ட வாங்கும் கடனுக்கு வட்டி 7.50 சதவீதம், வாகனத்திற்கான கடனுக்கு வட்டி 8 சதவீதம், அடமானக் கடனுக்கான வட்டி 9.20 சதவீதம், ஆனால் கல்விக்கு கடன் வாங்கினால் வட்டி 10.15 சதவீதம். கடன் வாங்கி கார் வாங்கினால் ஊக்குவிப்பதும், கடன் வாங்கி கல்வி கற்றால் தண்டிப்பதும் தான் ஒன்றிய அரசின் கல்விக்கொள்கை. இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
+
Advertisement