Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

1) பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல மாணவ / மாணவிகளிடம் இருந்து 2024-2025ம் ஆண்டிற்கான பள்ளி மேற்படிப்பு (PM YASASVI Postmatric Scholarship For OBC’s, EBC’s & DNT’s Students) கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பங்கள் https://umis.tn.gov.in (Integration with USS Portal என்ற இணையதளத்தில் 28.02.2025 வரை வரவேற்க்கப்பட்டது.

2) மாணவ / மாணவிகளின் நலன் கருதியும், கல்வி உதவித்தொகை பெற தகுதியுள்ள ஒரு மாணவர் கூட விடுபடக்கூடாது என்ற நோக்கத்தோடும் 2024-2025ம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க கால அவகாசம் 15.03.2025 வரை நீட்டிக்கப்படுகிறது.

3) அனைத்து கல்வி நிலைய முதல்வர்களும், கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட விபரத்தினை மாணவ - மாணவிகளுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

4) மேலும், நீட்டிக்கப்பட்ட கால அவகாசத்திற்குள், அனைத்து மாணவ - மாணவிகளும் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.