2,000க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயன்பெற விண்ணப்பித்துள்ளனர்: அமுதா ஐ.ஏ.எஸ் பேட்டி
சென்னை: 2,000க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயன்பெற விண்ணப்பித்துள்ளனர் என தமிழ்நாடு அரசின் ஊடகச் செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ் பேட்டி அளித்துள்ளார். 37,416 பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கல்வியில் சிறந்த தமிழ்நாடு கொண்டாட்டம் வரும் வியாழக்கிழமை அன்று நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்க உள்ளது. நான் முதல்வன், காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட 7 திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்படும். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 14,60,000 குழந்தைகள் பல்வேறு திறன்களை பெற்றுள்ளனர். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 500க்கும் மேற்பட்ட திறன்களில் மாணவர்கள் பயிற்சி பெற திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளை விட இவ்வாண்டு ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் நேர்காணல் மூலம் பணி நியமனம் பெற்றுள்ளனர் என தெரிவித்தார்.