Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கல்வி உதவித் தொகையை UPI மூலம் பெற QR Code-ஐ ஸ்கேன் செய்து PIN Number கொடுக்கச் சொன்ன மோசடி கும்பல்

கோவை : பள்ளிக் கல்வித்துறையில் இருந்து கல்வி உதவித் தொகை வந்துள்ளதாகக் கூறி, கோவையில் ஒரே பள்ளியைச் சேர்ந்த பல மாணவர்களிடம் ஆயிரக்கணக்கில் பணமோசடி நடந்துள்ளதாக பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். திக்கித் திணறி தமிழில் பேசியுள்ள வடமாநில கும்பல், “உதவித் தொகையை பெற வேண்டுமானால் நாங்கள் அனுப்பும் QR Code-ஐ ஸ்கேன் செய்து PIN Number-ஐ கொடுக்க வேண்டும்" எனக் கூறி பணத்தை சுருட்டியுள்ளது. UPI-ல் பணத்தை பெறுவதற்கு PIN Number கொடுக்கத் தேவையில்லை என்பதை அறியாமல், ஸ்கேன் செய்து பணத்தை இழந்த பலரும் போலீசில் புகார் அளித்துள்ளனர்.