சென்னை: தகுதி தேர்வு கட்டாயம் என்ற தீர்ப்பு குறித்து ஆசிரியர்கள் அச்சப்பட தேவையில்லை
ஆசிரியர் பணியில் தொடர தகுதி தேர்வு கட்டாயம் என்ற தீர்ப்பு குறித்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். ஆசிரியர்களை ஒருபோதும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கைவிடாது. தகுதி தேர்வு கட்டாயம் என்பது நமது கல்வித்துறைக்கு விடப்பட்ட சவால்; சவாலில் வெற்றி பெறுவோம் என்றும் கூறினார்.