ஈரோடு: ஈரோட்டில் நேற்று பாஜ பிரமுகர் எழுதிய புத்தக வெளியீட்டு விழா நடந்தது. இதில் தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை புத்தகங்களை வெளியிட்டு பேசுகையில், ‘இந்த நிகழ்ச்சியில் நான் அரசியல் பேசுவதை முற்றிலும் தவிர்க்கிறேன். ஏனெனில், மதுரையில் நடைபெற்ற முருகன் மாநாட்டில் அரசியல் பேசியதால் ஆதீனம் மீது எப்.ஐ.ஆர். போட்டுவிட்டார்கள்.
இந்த விழாவிலும், ஒரு ஆதீனம் உள்ளார். (கௌமார மடத் தலைவர் ராமானந்த குமரகுருபர சுவாமிகள்) அதனால் இங்கு அரசியல் பேசுவதை தவிர்க்கிறேன்’ என்றார். இதே போல விழாவில் அதிமுக பற்றியும், எம்ஜிஆர், ஜெயலலிதாவையும் புகழ்ந்து பேசிய அண்ணாமலை எடப்பாடி பழனிசாமி பற்றி பேசுவதை தவிர்த்துவிட்டார்.