சென்னை: அதிமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 7ம் தேதி முதல் தொகுதி வாரியாக தொடர் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி ஆகஸ்டு 8ம் தேதி வரை தொடர் பிரசாரம் செய்திடும் வகையில் அறிவிக்கப்பட்டிருந்த சுற்றுப்பயண திட்டத்தில், வருகிற 26ம் தேதி மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயணம் ஒத்தி வைக்கப்படுகிறது. அதற்கு பதில் வருகின்ற 29ம் தேதி சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
Advertisement