சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 23ம் தேதியில் இருந்து 25ம் தேதி வரை சுற்றுப்பயணம் செய்யும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற தொகுதி வாரியாக தொடர் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, 23.8.2025 (சனி) திருவெறும்பூர், திருச்சி கிழக்கு, லால்குடி ஆகிய சட்டமன்ற தொகுதிகளிலும், 24.8.2025 (ஞாயிறு) மணச்சநல்லூர், துறையூர், முசிறி ஆகிய தொகுதிகளிலும், 25ம் தேதி (திங்கள்) மணப்பாறை, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம் ஆகிய தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் செய்கிறார். இந்த பயணத்திற்கான ஏற்பாடுகளை, சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் சிறப்பான முறையில் செய்திட வேண்டும்.