சென்னை: அதிமுக தலைமைக் கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: அண்ணாவின் 117வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு வருகிற 15ம் தேதி(திங்கட் கிழமை) முதல் 17ம் தேதி வரை மூன்று நாட்கள், பொதுக்கூட்டங்கள்’ அதிமுக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் 82 மாவட்டங்களிலும்; அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன. பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள், அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வரும் 15ம் தேதி தென்சென்னை வடக்கு(மேற்கு) மாவட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு பேசுகிறார். திருவள்ளூர் வடக்கு மாவட்டத்தில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், செய்தித் தொடர்பாளர் அ.சசிரேகா, ஆரணி கே.அன்பழகன்.
வடசென்னை தெற்கு மேற்கு மாவட்டம்- மகளிர் அணிச் செயலாளர் பா.வளர்மதி, மாவட்ட செயலாளர் நா.பாலகங்கா, அண்ணா தொழிற்சங்கப் பேரவை பொருளாளர் எம்.அப்துல் அமீது, தாராபுரம் சி.முத்துமணிவேல், எம். சபாபதி. திருவள்ளூர் மத்திய மாவட்டம்- மாவட்ட செயலாளர் பென்ஜமின், அமைப்பு செயலாளர் ராயபுரம் மனோ, செய்தி தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி, புலவர் மா. குழந்தைசாமி. காஞ்சிபுரம் மாவட்டம்- இலக்கிய அணி செயலாளர் எஸ்.எஸ்.வைகைச்செல்வன், நடிகை மற்றும் பாடகி டி.கே.கலா, போளூர் எம்.குமார். வடசென்னை வடக்கு(கிழக்கு) மாவட்டம்- முன்னாள் அமைச்சர் எஸ்.அப்துல் ரஹீம், மகளிர் அணி துணை செயலாளர் அமுதா அருணாச்சலம், நாஞ்சில் என். கோபிநாத். செங்கல்பட்டு மேற்கு மாவட்டம்- முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், சி.த.செல்லப்பாண்டியன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் நாவலூர் முத்து, திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் மனோஜ்குமார்.
வட சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டம்- முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், அமைப்பு செயலாளர் பச்சைமால், டாக்டர் ஆ.ராமசாமி, நடிகை பபிதா. சென்னை புறநகர் மாவட்டம்- மாணவர் அணி செயலாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரன், எம்.என்.முருகேசன், ஷகிலா பானு. திருவள்ளூர் தெற்கு மாவட்டம்- முன்னாள் அமைச்சர் மணிகண்டன், திரைப்பட இயக்குநர் ஷக்தி என்.சிதம்பரம், மணவை மாறன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.