எடப்பாடியை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் செங்கோட்டையன் ஒருங்கிணைப்பு குறித்து கண்டிப்பாக பேசுவேன்: பூவை ஜெகன்மூர்த்தி எம்எல்ஏ பேட்டி
சென்னை: புரட்சி பாரதம் கட்சியின் தலைவராக பூவை எம்.ஜெகன்மூர்த்தி எம்எல்ஏ பொறுப்பேற்று 23 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, நிருபர்களை சந்திக்கும் நிகழ்ச்சி திருவள்ளூரில் நேற்று நடந்தது. அப்போது, அவர் கூறியதாவது: செங்கோட்டையன் விவகாரம், அது உட்கட்சி விவகாரம். ஓபிஎஸ், செங்கோட்டையன் தனி கட்சி ஆரம்பித்தால் மக்கள்தான் பார்க்க வேண்டும். அதிமுக ஒன்றிணைந்தால் ஊர்கூடி தேர் இழுப்பதுபோல், அது நடந்தால் நல்லதுதான். பாஜ கூட்டணியில் இருந்து டிடிவி விலகியது குறித்து நயினாரிடம் தான் கேட்க வேண்டும். எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால், செங்கோட்டையன் இணைப்பு குறித்து கண்டிப்பாக வலியுறுத்துவேன். இவ்வாறு அவர் கூறினார்.