சென்னை: அதிமுக தலைமைக் கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி `மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணத்தின் 5ம் கட்டமாக வருகிற 17ம் தேதி முதல் 26ம் தேதி சட்டமன்ற தொகுதி வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். வரும் 17ம் தேதி தருமபுரி, பாப்பிரெட்டிபட்டி, அரூரில் பிரசாரம் மேற்கொள்கிறார். 18ம் தேதி பாலக்கோடு, பென்னாகரம், 19ம் தேதி ராசிபுரம் சேந்தமங்கலம், 20ம் தேதி நாமக்கல், பரமத்தி, வேலூர். 21ம் தேதி திருச்செங்கோடு, குமாரபாளையம், 23ம் தேதி குன்னூர், உதகமண்டலம், 24ம் தேதி கூடலூர், 25ம் தேதி வேடசந்தூர், கரூர், 26ம் தேதி அரவக்குறிச்சி (வேலாயுதம்பாளையம்), கிருஷ்ணராயபுரம் (தரகம்பட்டி), குளித்தலை (தோகைமலை) பிரசாரம் செய்கிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
+
Advertisement