திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 18 ஆம் தேதி முதல் தீவிரமாகசுற்று பயணத்தில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் சாலை ஓரங்களில் அதிமுக நிர்வாகிகள் வந்து கட்சி பேனர்களை அமைத்தும் கொடிகளை வைத்தும் அவரை வரவேற்றுஉள்ளனர்.
இந்த நிலையில் திருவாரூர் தேசியநெடுசாலையில் உள்ள தனியார் அரங்குக்கு அருகே எடப்பாடி பழனிசாமிக்காக வைக்கப்பட்டுஇருந்த பேனர் சாலையில் விழுந்து அப்பகுதியில் சென்ற ஒருவர் மீது விழுந்து விபத்து ஏற்பட்டது. உடனடியாக அந்த சாலையில் இருந்த பாதுகாப்பு போலீசார் அவருக்கு முதலுதவி அளித்து அனுப்பிவைத்தனர்.
இதைதொடர்ந்து உடனடியாக அந்த பேனரை அகற்றி சாலையில் இருந்து எடுத்துவைத்தனர் சாலை ஓரத்தில் எடப்பாடி பழனிசாமிக்காக வைக்கபட்டிருந்த பேனர் விழுந்து ஒருவர் காயம் அடைந்தது திருவாரூர் நகரில் பொதுமக்கள் இடையில் ஒருஅதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சாலை விபத்துக்கு காரணம் அனுமதியை மீறி பேனர் அதிக அளவில் வைக்கப்பட்டுஉள்ளது என குற்றமும் தெரிவித்துஉள்ளானர்.