சேலம்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது வீட்டில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று சந்தித்து பேசினார். சுமார் 50 நிமிடம் நீடித்த இந்த சந்திப்பில் தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. பின்னர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் அதிமுக தலைமையில் என்டிஏ கூட்டணி உள்ளது. ஒத்த கருத்துடைய பல்வேறு கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வருவதற்கு வாய்ப்புள்ளது. எங்களுடன் கூட்டணி சேருவதற்கு காலம், நேரம் இருக்கிறது. பொறுத்திருந்து பாருங்கள். ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பீர்களா என்று கேட்கிறீர்கள். எது தேவையோ அதை மட்டுமே தமாகா வலியுறுத்தி கேட்கும் என்றார்.
+
Advertisement


