Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எடப்பாடி முடிவுக்கு கட்டுப்படுவோம்: திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் வ.உ.சி. பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் திண்டுக்கல் சீனிவாசன் நிருபர்களிடம் கூறுகையில், `பிரிந்த அதிமுகவினர் ஒன்றிணைய வேண்டும் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எடுக்கும் முடிவுதான் எங்கள் முடிவு. அவர் கூறும் கருத்துக்கு கட்டுப்படுவோம்’ என்றார்.

இது தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் 6 பேர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்ததாக செங்கோட்டையன் கூறியுள்ளாரே என்று நிருபர்கள் கேட்டதற்கு, `அது உண்மையா; இல்லையா என்பது எனக்கு தெரியாது. செங்கோட்டையன் முடிவை அவர் கூறுகிறார். பொதுச்செயலாளர் எடுப்பதே எங்கள் முடிவு’ என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.