சென்னை: எடப்பாடி பழனிசாமியை ஒருபோதும் முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என அமமுக பொதுசெயலாளர் டி.டி.வி. தினகரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது
எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் பேச்சுக்கே இடமில்லை. தேஜ கூட்டணியில் இருந்து வெளியேறிய முடிவை மறுபரிசீலனை செய்யும் பேச்சுக்கே இடமில்லை.
அண்ணாமலை பேச்சுவார்த்தை தோல்வி
எடப்பாடி முதல்வர் வேட்பாளர் என்றால் பாஜக கூட்டணியில் சேர முடியாது. அண்ணாமலை யால்தான் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் சேர்ந்ததாகவும் டி.டி.வி. தினகரன் விளக்கம் அளித்தார். தேசிய ஜனநாயக கூட்டணியில் டி.டி.வி. தினகரனை மீண்டும் சேர்க்கும் அண்ணாமலையின் முயற்சி
தோல்வி அடைந்தது.
கூட்டணியில் இருந்து விலகல் - தினகரன் உறுதி
அண்ணாமலை நட்புரீதியாக சந்தித்து கூட்டணியில் மீண்டும் இணைய வலியுறுத்தினார். அண்ணாமலை சந்தித்து அழைப்பு விடுத்த பிறகும் டி.டி.வி. தினகரன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
அடுத்தடுத்த சர்ச்சைகளால் அதிமுக-பாஜக கூட்டணி பலவீனம்
அடுத்தடுத்து சர்ச்சைகளால் அதிமுக-பாஜக கூட்டணி பலவீனமான நிலையில் இருப்பதாக மூத்த பத்திரிகையாளர்கள் விமர்சனம் செய்துள்ளார்.
இறுதிவடிவம் பெறாத அதிமுக பாஜக கூட்டணி!
பாஜகவுடன் கூட்டணி இல்லை எனக் கூறி வந்த எடப்பாடி, டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்து பேசி இன்றுடன் 6 மாதங்கள் நிறைவு பெற்றுள்ளது. எடப்பாடி டெல்லி பயணத்தை தொடர்ந்து சென்னை வந்த அமித் ஷா, ஏப்ரலில் கூட்டணியை அறிவித்தார். அதிமுக, பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்டு சுமார் 6 மாதம் ஆகியும் கூட்டணி இன்னும் இறுதிவடிவம் பெறவில்லை. அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று எடப்பாடி தொடர்ந்து கூறிவந்தாலும் புதிய கட்சிகள் சேரவில்லை.
எடப்பாடியின் மெகா கூட்டணி கனவு நிறைவேறுமா?
ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ். ஆகியோரும் விலகிவிட்டனர். அதிமுக-பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்ட அந்த அணியில் சேருவதாக இதுவரை எந்த கட்சியும் அறிவிக்கவில்லை. அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று எடப்பாடி தொடர்ந்து கூறிவந்தாலும் புதிய கட்சிகள் சேரவில்லை. 2026ல் கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று பாஜகவும் தனித்து ஆட்சி அமைப்போம் என்று அதிமுகவும் கூறி வருவதால் அடுத்தடுத்து சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
சர்ச்சைகளால் பலவீனமடையும் அதிமுக-பாஜக கூட்டணி?
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, ஒபிஎஸ் உள்ளிட்டோரை சேர்க்க வேண்டும் என்று செங்கோட்டையன் போர்க்கொடி. அடுத்தடுத்து உட்கட்சி பிரச்சனையால் கூட்டணியை வலுப்படுத்தும் எடப்பாடியின் முயற்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.தேமுதிக, பாமக போன்ற கட்சிகளை கூட்டணியில் சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டாலும் அந்த கட்சிகள் பிடிகொடுக்கவில்லை. 2026ல் கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று பாஜகவும் தனித்து ஆட்சி அமைப்போம் என்று அதிமுகவும் கூறி வருவதால் அடுத்தடுத்து சர்ச்சை ஏற்பட்டது.