சென்னை: மதங்களைக் கடந்து உறவுகளாய் வாழ்ந்து வரும் தமிழ்நாட்டு மக்களிடம் எடப்பாடியின் தகிடுதத்தம் எதுவும் எடுபடாது. எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.இதுகுறித்து, நேற்று அவர் வெளியிட்ட எக்ஸ்தள பதிவு: பாஜ, ஆர்எஸ்எஸ் கைக்கூலியாக மாறி அதிமுகவை அமித்ஷா திமுகவாக மாற்றிய அடிமை பழனிசாமி, தமிழ்நாட்டு மக்களின் நலனைப் பற்றி துளியும் அக்கறையின்றி அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டில் கலவரம் செய்ய துடிக்கும் கயவர்களுக்கு துணைபோய் நிற்பது வெட்கக்கேடு.
மதப்பிரிவினைவாத சக்திகளும், அடிமைக் கைக்கூலிகளும் எவ்வளவு முயன்றாலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கும் வரை தமிழ்நாட்டின் அமைதியைச் சீர்குலைக்க முடியாது. மதங்களை கடந்து உறவுகளாய் வாழ்ந்து வரும் தமிழ்நாட்டு மக்களிடம் உங்களின் தகிடுதத்தம் எதுவும் எடுபடாது. எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு எக்ஸ்தள பதிவில் கூறியுள்ளார்.

