எடப்பாடியின் துரோகத்தில் லேட்டஸ்ட் அடிசன் கோவை மெட்ரோ ரயில் திட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை: எடப்பாடியின் துரோகத்தில் லேட்டஸ்ட் அடிசன் கோவை மெட்ரோ ரயில் திட்டம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வருங்கால வளர்ச்சிக்கு மெட்ரோ ரயில் தேவை வேண்டும் என கோரிக்கை வைத்தோம். ஆனால் பழைய மக்கள் தொகையை கணக்கில் கொண்டு மெட்ரோ ரயில் திட்டத்தை ஒன்றிய அரசு நிராகரித்துள்ளது. கோவைக்கு மெட்ரோ திட்டத்தை நிராகரித்த ஒன்றிய அரசின் செயல்பாட்டை எடப்பாடி நியாயப்படுத்துகிறார். தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் இருப்பதால்தான் கோவை மக்களை பாஜக அரசு வஞ்சிக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.


