Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

24ம் தேதி முதல் எடப்பாடி 2ம் கட்ட சுற்றுப்பயணம்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரசார பயணத்தை தொடங்கி உள்ளார். இந்த நிலையில் வரும் 24 முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை 2ம் கட்ட பயணத்தை எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள உள்ளதாக அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.

வரும் 24ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதியில் தனது பிரசாரத்தை எடப்பாடி தொடங்குகிறார். தொடர்ந்து 25ம் தேதி விராலிமலை, திருமயம் தொகுதியிலும், 26ம் தேதி காரைக்குடி திருப்பத்தூர் சிவகங்கை தொகுதியிலும், 30ம் தேதி மானாமதுரை, பரமக்குடி, திருவாடாணை(ஆர்.எஸ்.மங்கலம்) தொகுதியிலும் அவர் பிரசாரம் செய்கிறார்.

31ம் தேதி ராமநாதபுரம் முதுகுளத்தூர், விளாத்திகுளம் தொகுதியிலும், ஆகஸ்ட் 1ம் தேதி கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி தொகுதியிலும், 2ம் தேதி திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ராதாபுரம் தொகுதியிலும், 4ம் தேதி திருநெல்வேலி, பாளையங்கோட்டை, நாங்குநேரியிலும், 5ம் தேதி அம்பாசமுத்திரம், ஆலங்குளம், தென்காசி தொகுதியிலும், 6ம் தேதி கடையநல்லூர் வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் தொகுதியிலும், 7ம் தேதி ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி தொகுதியிலும், 8ம் தேதி சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை தொகுதியிலும் எடப்பாடி பிரசாரம் செய்கிறார்.