எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் ஓடிய சுந்தரா டிராவல்ஸ் பேருந்துகளுக்கு பதிலாக, தற்போது புதிய பேருந்துகள் இயக்கம் : அமைச்சர் சிவசங்கர்
சென்னை : எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் ஓடிய சுந்தரா டிராவல்ஸ் பேருந்துகளுக்கு பதிலாக, தற்போது புதிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு போக்குவரத்துத் துறை மிகப்பெரிய மாற்றத்தை எட்டியுள்ளது என்றும் எடப்பாடியின் குற்றச்சாட்டை பார்க்கும்போது, அவர் சாலையில் பயணிப்பதே இல்லை என்பதை காட்டுகிறது என்றும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.