Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஏறி வந்த ஏணியை மிதித்து தள்ளியவர் எடப்பாடி பழனிசாமி :அமைச்சர் எ.வ.வேலு பதிலடி

சென்னை : ஏறி வந்த ஏணியை மிதித்து தள்ளியவர் எடப்பாடி பழனிசாமி என்று தமிழக அமைச்சர் எ.வ.வேலு பதிலடி கொடுத்துள்ளார். மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வருபவர்களை இனி மருத்துவ பயனாளர்கள் என அழைக்க வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதற்கான அரசாணையும் தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சாணார்பாளையம் பகுதியில் நேற்று இரவு திரண்டிருந்த கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நோயாளிகளை மருத்துவ பயனாளர்கள் என அழைப்பது குறித்து விமர்சித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி உணர்வு மிக்கவர். ஏறி வந்த ஏணியை மிதித்து தள்ளியவர் எடப்பாடி பழனிசாமி. தன்னை போலவே அனைவரையும் எண்ணுகிறார் இபிஎஸ். நோயாளிகளை மருத்துவ பயனாளர்கள் என கூறுவதில் என்ன தவறு இருக்கிறது.எங்களுக்கு தமிழ் இலக்கண வகுப்பு எடுக்காதீர்கள்?. கம்பராமாயணத்தை எழுதியவர் கம்பர் என்ற கூட சொல்ல தெரியாதவர் இ.பி.எஸ்.பாக்கெட்டில் எம்.ஜி.ஆர். புகைப்படத்தை வைக்க பயப்படுபவர்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து பேசும் முன் யோசித்து பேச வேண்டும்.10 ஆண்டுகளில் எந்த திட்டத்திற்கு அவர் பெயர் வைத்தீர்கள்.2026ல் எடப்பாடி பழனிசாமி அமைப்பது வலுவான கூட்டணியா, நஞ்சு போன கூட்டணியா, மொத்தமாக தோற்கப்போகும் | கூட்டணியா என ஜோசியம் சொல்ல முடியாது. |திமுக தலைமையிலான கூட்டணி தொடர் வெற்றிகளை பெற்று வருகிறது. முதலமைச்சர் கூறியது போல 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம்," இவ்வாறு அவர் கூறினார்.