கட்சி பதவியில் இருந்து தங்களையும் நீக்கக் கோரி எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் ஆதரவாளர்கள் கடிதம்
சென்னை : கட்சி பதவியில் இருந்து தங்களையும் நீக்கக் கோரி எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் ஆதரவாளர்கள் கடிதம் எழுதியுள்ளார். ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக ஒன்றிய நகரை கிளைக் கழக நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி உள்ளனர். கட்சிப் பதவியில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்ட நிலையில் அவரது ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பினர். ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் எடப்பாடி பழனிசாமிக்கு தனித்தனியாக கடிதம் அனுப்பினர்.