சர்வதேச நிதியம் வெளியிட்ட புதிய தரவுகளின்படி உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா திகழ்கிறது. நடப்பு நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட தரவுப்படி இந்தியாவின் வளர்ச்சி வீதம் 6.6 ஆக உள்ளது. 4.8 விழுக்காடு வளர்ச்சியுடன் சீனா 2ம் இடத்தில் உள்ளது. ஜெர்மனி 0.2 விழுக்காடு, ரஷ்யா 0.6 விழுக்காடு,பிரான்ஸ் 0.7 விழுக்காடு, ஜப்பான் 1.1 விழுக்காடு, பிரிட்டன் 1.3 விழுக்காடு, அமெரிக்கா 2 விழுக்காடு வளர்ச்சி காணும் என கணிக்கப்பட்டுள்ளது.
வரும் நிதியாண்டில் வளர்ச்சிக் குறித்த கணிப்பில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியா 6.2 விழுக்காடு வளர்ச்சி விகிதத்துடன் முன்னிலையில் உள்ள நிலையில் சீனாவும், நைஜீரியாவும் தலா 4.2 விழுக்காடு வளர்ச்சியுடன் 2ம் இடத்தில் உள்ளன. அமெரிக்கா 2.1 விழுக்காடு,பிரிட்டன் 1.3 விழுக்காடு, ரஷ்யா 1 விழுக்காடு, ஜெர்மனி 0.9 விழுக்காடு, பிரான்ஸ் 0.9 விழுக்காடு, ஜப்பான் 0.6 விழுக்காடு வளர்ச்சி காணும் என ஐஎம்எஃப் கணித்துள்ளது.