மணிலா: தெற்கு பிலிப்பைன்சில் நேற்று அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர். தெற்கு பிலிப்பைன்சில் நேற்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. மருத்துவமனைகள் மற்றும் பள்ளிக்கட்டிடங்கள் சேதமடைந்தன. மேலும் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டதால் கடலோர பகுதிகளில் வசித்தவர்கள் வெளியேறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சம்பவங்களில் சுமார் 5 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து இரண்டாவதாக சுமார் 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் டாவோ ஓரியண்டல் மாகாணத்தில் உள்ள மனாய் நகரத்தை மையமாக கொண்டு சுமார் 10கி.மீ. ஆழத்தில் உருவாகி இருந்தது.
+
Advertisement