Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 7 பேர் உயிரிழப்பு 150 பேர் படுகாயம்

காபூல்: ஆப்கானிஸ்தானில் நள்ளிரவு 1.59 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானில் இந்துகுஷ் மலைத்தொடர் அருகே பல்ஹா மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மசிர் ஐ ஷெரிப் நகரை மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவானது. மஸார்-இ-ஷெரிஃப் நகரத்துக்கு 28 கி.மீ.க்கு அடியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. உடனே பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

பல கட்டடங்கள் இடிந்துள்ளதால் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக நிலநடுக்கத்தால் 7 பேர் உயிரிழந்ததாகவும், 150 பேர் காயமடைந்தகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் மீட்பு பணி நடைபெற்று வருகிறது. அதிகாலையில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை ஒட்டி ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மசார்-இ-ஷெரீப்பில் உள்ள ப்ளூ மசூதிக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த இடம் இஸ்லாத்தின் நான்காவது கலீபாவும் நபிகள் நாயகத்தின் மருமகனுமான ஹஸ்ரத் அலியின் அடக்கம் செய்யப்பட்ட இடம் என கூறப்படுகிறது.