காட்டி நிறுவனம் புதிய மேம்படுத்தப்பட்ட ஸ்டிரீட் பைட்டர் வி2 என்ற மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இதில் விட மற்றும் வி2 எஸ் என 2 வேரியண்ட்கள் உள்ளன. இந்த மோட்டார் பைக்கில் 890 சிசி வி-டிவின் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 10,750 ஆர்பிஎம்-ல் 120 எச்பி பவரையும், 8,250 ஆர்பிஎம்-ல் 93 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். முந்தைய மாடலில் 955 சிசி இன்ஜின் இடம் பெற்றிருந்தது. இதற்கு மாற்றாக குறைந்த சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், டுகாட்டி குயிக் ஷிப்ட் 2.0 சிஸ்டம், ஸ்லிப்பர் கிளட்ச் இடம் பெற்றுள்ளன.
ஸ்டாண்டர்டு வேரியண்டான வி2-வில் முன்புறம் மர்சோச்சி போர்க் சஸ்பென்ஷன் பின்புறம் கேஒய்பி மோனோ ஷாக் அப்சர்வர் இடம் பெற்றுள்ளது. வி2 எஸ் வேரியண்டில் ஓலின்ஸ் என்ஐஎக்ஸ் 30 முன்புற போர்க்குகள், பின்புறம் ஓலின்ஸ் ஷாக் அப்சர்வர் இடம் பெற்றுள்ளது. இதுதவிர 5 அங்குல டிஎப்டி டிஸ்பிளே உள்ளது. குரூஸ் கன்ட்ரோல், நேவிகேஷன், யுஎஸ்பி சார்ஜர், டயர்களில் காற்று அழுத்தத்தை அளவிடும் கருவி ஆகியவற்றை விருப்பத் தேர்வாக வாங்கிக் கொள்ளலாம். ஷோரூம் விலையாக வி2 ஸ்டாண்டர்டு வேரியண்ட் சுமார் ரூ.17.5 லட்சம் எனவும், எஸ் வேரியண்ட் சுமார் ரூ.19.49 லட்சம் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

