டுகாட்டி நிறுவனம், பெனிக்லே வி2 மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.இந்த மோட்டார் சைக்கிள் முதன் முதலாக கடந்த ஆண்டு நடந்த மிலன் மோட்டார் சைக்கிள் கண்காட்சில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதில் 890 சிசி இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 10,750 ஆர்பிஎம்-ல் 120 எச்பி பவரையும், 8,250 ஆர்பிஎம்-ல் 93.3 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது.
முன்புறம் டெலஸ்கோப்பிக் சஸ்பென்ஷன், பின்புறம் கயாபா மோனோ ஷாக் அப்சர்வர்கள், டிஸ்க் பிரேக், டூயல் சேனல் ஏபிஎஸ், 5 அங்குல டிஎப்டி டிஸ்பிளே இடம் பெற்றுள்ளன. துவக்க ஷோரூம் விலை சுமார் ரூ.19.12 லட்சம். டாப் வேரியண்ட் சுமார் ரூ.21.1 லட்சம்.
