தொண்டி: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியிலிருந்து நேற்று ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி நோக்கி வந்த தனியார் பேருந்தில், பல கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தி வருவதாக ராமநாதபுரம் சுங்கத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, விரைந்து சென்ற சுங்கத்துறை அதிகாரிகள் தொண்டி அருகே பாசிபட்டினம் பகுதியில் பேருந்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, சுமார் 1.50 கிலோ ஐஸ் என்ற மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பார்சல் இருந்ததை கண்டறிந்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.4 கோடி ஆகும். இந்த பார்சலை பறிமுதல் செய்து, இதனை யார் கடத்தி வந்தது?, அவர்களுக்கு கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருக்கிறதா என விசாரித்து வருகின்றனர்.
+
Advertisement


