ஹைதராபாத் : தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே ரசாயன தொழிற்சாலை என்ற பெயரில் செயல்பட்டு வந்த இடத்தில் ரூ.12,000 கோடி மதிப்பிலான 32,000 லிட்டர் 'எம்டி' ரக போதை திரவம் பறிமுதல் செய்யப்பட்டது. தானேவில் கைதான ஒருவர் கொடுத்த ரகசிய தகவலால் செர்ல்லப்பள்ளியில் உள்ள ஆலையில் மகாராஷ்டிரா காவல்துறை சோதனை செய்தது. நாடு முழுவதும் பெரிய நெட்வொர்க் ஒன்றை ஏற்படுத்திய ஐஐடி பட்டதாரி உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
+
Advertisement