Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அடுத்த வாரத்துக்குள் மருந்து ஆய்வாளர் பணியிடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்: மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் தகவல்

சென்னை: மருந்து கட்டுப்பாட்டு இயக்கக அதிகாரிகள் கூறியதாவது: மாநிலம் முழுவதும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்தகங்களும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட உற்பத்தி நிறுவனங்களும் உள்ளன. இதைத் தவிர மொத்த விற்பனையகங்களும் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் செயல்பாடுகள், உற்பத்தி மற்றும் விற்பனை செய்யப்படும் மருந்துகளின் தரத்தை தொடர் ஆய்வுக்குட்படுத்துவது வழக்கம். அதில் போலி மருந்துகளோ, தரமற்ற மருந்துகளோ கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. விதிகளுக்குப் புறம்பாக செயல்படும் மருந்து விற்பனையகங்கள் மீது சட்ட நடவடிக்கையும் முன்னெடுக்கப்படுகிறது. இந்த பணிகளில் மருந்து ஆய்வாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். தற்போது தமிழகம் முழுவதும் 120 மருந்து ஆய்வாளர்கள் பணியில் உள்ளனர். காலியாக உள்ள 18 இடங்களை நிரப்பக் கோரி அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தோம். அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அதில் 14 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு அடுத்த சில நாள்களில் நடத்தப்பட உள்ளது. இவ்வாறு மருந்து கட்டுப்பாட்டு இயக்கக அதிகாரிகள் கூறினர்.