சென்னை: ஆயிரம் விளக்கு சுதந்திரா நகரில் போதை பொருட்கள் விற்பதாக ஆயிரம் விளக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் முன்தினம் அந்த பகுதியில் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு சிறுவன், சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி வந்தான்.
அவனை பிடித்து சோதனை செய்த போது, 2 போதை ஊசிகள், 5 போதை மாத்திரைகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் என தெரியவந்தது. அவனை சிறார் நீதிக்குழுமத்தில் ஆஜர்படுத்தித்தி அரசு கூர் நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.