வாஷிங்டன்: போதைப்பொருள் தயாரிப்பு மற்றும் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியாவை அதிபர் டிரம்ப் சேர்த்துள்ளார். சட்டவிரோதமாக போதைப்பொருள் தயாரிப்பு மற்றும் கடத்தலில் ஈடுபடும் நாடுகள் பட்டியலை டிரம்ப் வெளியிட்டார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட 23 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் என கூறப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட போதைப்பொருள் நாடுகளால் குடிமக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என குறிப்பிட்டுள்ளார்.
+
Advertisement