கோபன்ஹேகன்: டிரோன்கள் ஊடுருவல் காரணமாக டென்மார்க்கில் உள்ள ஆல்போர்க் விமான நிலையம் மூடப்பட்டது. டென்மார்க் நாட்டின் தலைநகர் கோபன்ஹேகனில் உள்ள விமான நிலையத்தில் கடந்த திங்கள்கிழமை டிரோன்கள் காணப்பட்டன. இதையடுத்து பாதுகாப்பு கருதி பல மணி நேரம் விமான நிலையம் மூடப்பட்டது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் டென்மார்க்கின் வடக்கு பகுதியில் உள்ள ஆல்போர்க் விமான நிலையம் உள்பட 4 விமான நிலையங்களில் டிரோன்கள் நேற்றுமுன்தினம் ஊடுருவியுள்ளன. விமான நிலையத்தின் வான்வெளி பகுதியில் அங்கீகரிக்கப்படாத டிரோன்கள் காணப்பட்டதையடுத்து ஆல் போர்க் விமான நிலையம் மூடப்பட்டது. டிரோன்களின் இயக்கத்தின் பின்னணியில் ரஷ்யா இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
+
Advertisement