குடிநீர் குழாய் உடைப்பு காரணமாக நெல்லையில் 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்: மாநகராட்சி அறிவிப்பு
நெல்லை: குடிநீர் குழாய் உடைப்பு காரணமாக நெல்லையில் 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.மேலப்பாளையத்தில் சுத்தமல்லி தலைமை குடிநீரேற்று நிலையம் அருகில் 600 எம்.எம். குழாய் உடைந்துள்ளது. மாநகராட்சி சார்பில் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.