Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து கூடுதலாக 265 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் புதிய திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

திருவள்ளூர்: செம்பரம்பாக்கம் ஏரி சுத்திகரிப்பு மையத்தில் இருந்து கூடுதலாக 265 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார். சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில், ரூ.66.78 கோடி மதிப்பீட்டில் சென்னை மாநகர் மற்றும் சென்னை ஒட்டியுள்ள மாநகராட்சி, நகராட்சிகள் பேரூராட்சி பகுதிகளுக்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் சுத்திகரிப்பு மையத்தில் இருந்து கூடுதலாக நாளொன்றுக்கு 265 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார். இந்த கூடுதல் குடிநீர் வழங்கும் திட்டத்தின் மூலம் செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்தின் முழு அளவான நாளொன்றுக்கு 530 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்கப்படும். இதன் மூலம் அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையார் மண்டலங்கள் மற்றும் ஆவடி, தாம்பரம் மாநகராட்சிகள், பூந்தமல்லி, திருவேற்காடு, குன்றத்தூர், மாங்காடு நகராட்சிகள், ஸ்ரீபெரும்புதூர், திருமழிசை பேரூராட்சிகளைச் சேர்ந்த சுமார் 20 லட்சம் பொதுமக்கள் பயன் பெறுவார்கள்.

அத்துடன் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றம் தொடர்பாக பொதுமக்கள் அழைக்கும் புகார்களுக்கு உடனடியாக தீர்வு காணும் வகையில், ‘’சென்னை குடிநீர்’’ என்ற புதிய செயலியை அறிமுகம் செய்து வைத்தார். இதையடுத்து நகராட்சி நிர்வாகத்துறையில் புதிதாக பணி நியமனம் செய்யப்பட்ட ஐந்து பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஆவடி சா.மு.நாசர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மு.பிரதாப், ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ, சென்னை குடிநீர் வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் டி.ஜி.வினய், செயல் இயக்குநர் கௌரவக்குமார், பொறியியல் இயக்குநர் ஓ.பர்வீஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக விழாவுக்கு வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பூந்தமல்லி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர் தலைமையில், ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ முன்னிலையில் ஒன்றிய செயலாளர் ப.ச.கமலேஷ் ஏற்பாட்டில், பொதுக்குழு உறுப்பினர்கள் எம்.முத்தமிழ் செல்வன், வி.குமார், பேரூர் செயலாளர் தி.வே.முனுசாமி, பேரூராட்சி தலைவர் ஜெ.மகாதேவன், ஒன்றிய நிர்வாகிகள் டி.அண்ணாமலை, ஏ.ஜனார்தனன், எம்.இளையான், சுமதி குமார், எஸ்.புகழேந்தி, ஏ.ஆர்.பாஸ்கர், ஆர்.பிரபாகரன் வரவேற்பு அளித்தனர்.

இதுபோல், வி.பி.பிரகாஷ், க.பரிமேலழகன், பூந்தமல்லி நகர செயலாளர் ஜி.ஆர்.திருமலை தலைமையில் பூந்தமல்லியில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. பூந்தமல்லி நகரமன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், மாவட்ட பிரதிநிதி லயன் சுதாகர் தலைமையில், குமணன்சாவடி வரவேற்று அளித்தனர். நகரமன்ற துணைத் தலைவர் ஸ்ரீதர், நகர பொருளாளர் அசோக் குமார் ஆகியோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். மாநில இளைஞரணி துணை செயலாளர் பிரபு கஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர்கள் வி.ஜெ.சீனிவாசன், வேப்பம்பட்டு எஸ்.ஜெயபாலன்,முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், நகர செயலாளர்கள் திருவேற்காடு என்.இ.கே.மூர்த்தி, பூந்தமல்லி ஜி.ஆர்.திருமலை, முன்னாள் ஒன்றிய செயலாளரும் முன்னாள் ஒன்றிய தலைவருமான பூவை.எம்.ஜெயக்குமார், பொதுக்குழு உறுப்பினரும் திருமழிசை பேரூராட்சி தலைமருமான ஜெ.மகாதேவன், பொதுக்குழு உறுப்பினரும் பூந்தமல்லி நகர மன்ற தலைவருமான காஞ்சனா சுதாகர், மாவட்ட பிரதிநிதிகள் லயன் சுதாகர், பூவை சு.அசோக்குமார், திருநின்றவூர் பி.எல்.ஆர்.யோகா ஆகியோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.