மதுரை: திருமங்கலம் அடுத்த தெற்கூரில் குடிநீர் குழாய் அமைப்பதில் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டார். தகராறில் சரத்குமார், லட்சுமி ஆகியோர் பக்கத்து வீட்டுகாரர் கண்ணனை (37) கத்தியால் குத்தியதில் அவர் உயிரிழந்தார். தகராறை தடுக்க சென்ற சசிகுமார் என்பவர் படுகாயங்களுடன் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Advertisement