திராவிட மாடல் அரசின் திட்டங்கள், நாட்டிற்கே முன்னோடியாக உள்ளன: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்
ராணிப்பேட்டை: மகளிர் முன்னேற்றத்திற்கு எண்ணற்ற திட்டங்களை திராவிட மாடல் அரசு நிறைவேற்றி வருகிறது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டையில் நடைபெறும் அரசு விழாவில் ரூ.24.34 கோடியிலான 6 புதிய திட்டப்பணிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும் ராணிப்பேட்டையில் ரூ.43.74 கோடி மதிப்பீட்டிலான 115 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர்; மகளிர் முன்னேற்றத்திற்கு எண்ணற்ற திட்டங்களை திராவிட மாடல் அரசு நிறைவேற்றி வருகிறது.
கடந்த நான்கரை ஆண்டுகளில் மகளிர் விடியல் பயணத்தின் மூலம் 820 கோடி பயணங்களை மேற்கொண்டுள்ளனர். மகளிர் விடியல் பயணத்திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.900 முதல் ரூ.1000 வரை பெண்கள் சேமிக்கின்றனர். மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண் உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றியுள்ளது திராவிட மாடல் அரசு. நிதி நெருக்கடியிலும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. 1.20 கோடி மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 1000 உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. அடுத்த மாதம் முதல் கூடுதல் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்பட உள்ளது.
திராவிட மாடல் அரசின் திட்டங்கள், நாட்டிற்கே முன்னோடியாக உள்ளன. திராவிட மாடல் அரசின் திட்டங்களை, பல்வேறு மாநிலங்களும் பின்பற்றி செயல்படுத்துகின்றன என்று கூறினார்.
