சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. திட்டங்கள் குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக சீமான் கருத்து தெரிவித்த விவகாரத்தில், 2018ல் கூட்டத்தில் தமிழ் ஈழம், நீயூட்ரினோ, சேலம் 8 வழிச் சாலை திட்டம் அரசுக்கு எதிராக சீமான் கருத்து தெரிவித்திருந்தார். சீமானின் பேச்சு கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளதாக கூறி துணை காவல் ஆய்வாளர் புகார் தெரிவித்து இருந்தார். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்யக்கோரியும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சைதை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
+
Advertisement