சென்னை: டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்களில் குறிப்பிட்ட விண்ணப்பங்கள் மட்டுமே இணைய தளத்தில் பதிவேற்றம் ஆகியுள்ளதால், ஆகஸ்ட் 3ம் தேதிக்குள் பிழைகளை திருத்தி மீண்டும் பதிவேற்ற வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான விருது பெறத் தகுதியுள்ள ஆசிரியர்கள் தங்களுக்கான விண்ணப்பங்களை பள்ளிக்கல்வித்துறையின் EMIS இணைய தளம் மூலம் ஜூலை 20ம் தேதி முதல் ஆகஸ்ட் 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி 38 மாவட்டங்களில் இருந்து 1180 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டன. ஆனால் அவற்றில் 42 விண்ணப்பங்கள் மட்டுமே முழுமையாக பதிவேறியுள்ளன. தவறாக உள்ளீடு ெசய்திருந்தால், அதை திருத்தம் செய்து மீண்டும் சமர்ப்பிக்கும் வசதி EMIS தளத்தில் ஏற்படுத்தப்பட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பங்களில் திருத்தங்கள் இருந்தால் அதை சரி செய்து ஆகஸ்ட் 3ம் தேதிக்குள் முழுமையான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
Advertisement