Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திரைமறைவிலிருந்து தமிழர் ஆட்சி நடத்துவதை நீங்கள் விரும்புகிறீர்களா: ஒடிசாவில் அமித்ஷா கேள்வி

பத்ரக்: ‘‘திரைமறைவிலிருந்து தமிழர் ஆட்சி நடத்துவதை நீங்கள் விரும்பகிறீர்களா?’’ என ஒடிசாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசி உள்ளார். ஒடிசாவில் பத்ரக் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட சந்த்பாலியில் நேற்று நடந்த தேர்தல் பேரணியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: ஒடிசாவில் 21 மக்களவைத் தொகுதிகளில் 17ல் பாஜ வெற்றி பெறும். இதே போல 147 சட்டசபை தொகுதிகளில் 75ல் நாங்கள் வெற்றி அடைவோம். எனவே ஜூன் 4ம் தேதி வந்துபாருங்கள், நவீன் பட்நாயக் இங்கு முதல்வராக இருக்க மாட்டார். அவர் முன்னாள் முதல்வராகி இருப்பார். ஒடிசாவில் அடுத்த முதல்வர் ஒடியாவில் சரளமாகப் பேசுவதையும், மாநிலத்தின் மொழி, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை புரிந்து கொள்பவராக இருப்பதையும் பாஜ உறுதி செய்யும்.

தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி (பிஜூ ஜனதா தளத்தை சேர்ந்த வி.கே.பாண்டியனை குறிப்பிட்டார்) திரைமறைவில் இருந்து ஆட்சி நடத்த வேண்டுமா? அதை நீங்கள் விரும்புகிறீர்களா? அல்லது அதிகாரிக்கு பதிலாக மக்கள் சேவகன் ஆட்சி அமைய விரும்புகிறீர்களா? மக்கள் சேவகன் வேண்டுமென்றால் பாஜவுக்கு வாக்களியுங்கள். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பார்த்து பயப்படுவதால் அதைப் பற்றி காங்கிரஸ் வாய் திறப்பதில்லை. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நமக்கே சொந்தம். அதை நாங்கள் மீட்டெடுப்போம் என்றார்.