சென்னை: சென்னையில் மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு மகனின் உடலில் 19 இடங்களில் சூடுவைத்த ஓட்டுநரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருவாரூர் மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட ஓட்டுநர் ராஜ்கண்ணன் என்பவர் தனது மனைவி குழந்தையுடன் சென்னையில் வசித்து வந்த நிலையில் மனைவி மேல் சந்தேகம் கொண்டு அடித்து உடைத்ததாகவும் அதன் தொடர்ச்சியாக தோசை கரண்டியால் தனது 8 வயசு மகனின் உடலில் சூடுவைத்ததாக கூறப்படுகிறது.
பலத்த காயங்களுடன் மன்னார் குடிக்கு அழைத்து செல்லப்பட்ட சிறுவனை அங்குஉள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்த நிலையில் சூடுவைத்த கொடுமை போலீசாருக்கு தெரியவைத்துள்ளது.