கோவை: கோவையில் 2015ல் நடந்த இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகள் 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மொய்தீன் பாஷா, ஹபீத் முகமது ஆகியோரை கொன்ற வழக்கில் 5 பேருக்கு கோவை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.சாதிக் அலி, அஸ்கர் அலி, மன்சூர் அலி, ஜாகீர் உசேன், அசாருதீன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 2015ல் இறைச்சிக் கடையில் ஈரல் எடுத்து வந்ததை தட்டிக்கேட்ட தகராறில் இருவர் கொலை செய்யப்பட்டனர். இறைச்சிக் கடை நடத்தி வந்த மொய்தீன் பாஷா, ஹபீத் முகமது ஆகியோரை மற்றொரு தரப்பு கத்தியால் குத்திக் கொன்றது.
+
Advertisement
