ஸ்ரீவில்லிபுத்தூர்: ‘என்ன நடக்கப்போகிறது என்றே தெரிய வில்லை...’ என அதிமுக முன்னாள் எம்பியும், நடிகருமான ராமராஜன் தெரிவித்து உள்ளார். விருதுநகர் மாவட்டம் வில்லிபுத்தூர் பெருமாள்பட்டியில் நேற்று நடைபெற்ற விழாவில், அதிமுக முன்னாள் எம்பியும், நடிகருமான ராமராஜன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘நான் உயிர் உள்ளவரை எம்ஜிஆர், ஜெயலலிதாவின் தொண்டனாகவே இருப்பேன். எனக்கு அதிமுகவில் பொறுப்புகள் கிடையாது. கொடுக்கப்படவும் இல்லை. கட்சிக்குள் சண்டைகள் இருக்கத்தான் செய்யும். எம்ஜிஆர் வழியில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள். ஆனால், தற்போது உள்ள சூழ்நிலையில் அதிமுகவில் என்ன நடக்கப்போகிறது என தெரியவில்லை’’ என்று கூறினார்.
+
Advertisement