காந்திநகர்: குஜராத்தில் பதிவு செய்யப்பட்ட 10 சிறிய அரசியல் கட்சிகள் 2019 - 2024 காலகட்டங்களில், ரூ.4,300 கோடி வரை நன்கொடைகளைப் பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அதே காலகட்டத்தில் அங்கு நடந்த 3 தேர்தல்களில், 10 கட்சிகளும் சேர்த்து மொத்தமாகவே ரூ.39.02 லட்சம் மட்டுமே தேர்தல் செலவாக கணக்கு காட்டியுள்ளன. ஆனால், தணிக்கை அறிக்கையில் ரூ.3,500 கோடி செலவிட்டதாக அந்த கட்சிகள் தெரிவித்திருப்பது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளன.
+
Advertisement