அலங்காநல்லூர்: மதுரை ஜெய்ஹிந்த்புரம், பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடசுப்பு (56). டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று காலை டீக்கடையை திறக்க மனைவி பத்மாவதியுடன் (54), டூவீலரில் கிளம்பினார். சிக்கந்தர்சாவடி பகுதியில் வந்தபோது திடீரென சாலையின் குறுக்கே நாய் ஓடி வந்தது.
இதனால் நிலைதடுமாறிய டூவீலர், நாய் மீது மோதியதில் கீழே சாய்ந்தது. இதில், கணவன், மனைவி இருவரும் ரோட்டின் கீழே விழுந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் பின்னால் மதுரை பெரியார் நிலையத்தில் இருந்து அதலை நோக்கி சென்ற அரசு பேருந்து இருவர் மீதும் மோதியது. இதில், அவர்கள் உடல் நசுங்கி பலியாகினர். தம்பதி உயிரிழக்க காரணமான நாயும் இறந்தது.


