சென்னை: தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி தேசியக் கல்லூரியின் உடற்கல்வியியல் துறையில் 2021முதல் உடற்கல்வி இயந்திரக் கற்றல் வழியாகப் பள்ளி மாணவர்களுக்கு திறன்மிகு கற்றல் என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு செய்து வந்தார். இதன் ஒரு பகுதியாக நேற்று திருச்சி தேசியக் கல்லூரியின் உள்விளையாட்டு அரங்கில் அவருக்கு முனைவர் பட்ட வாய்மொழித் தேர்வு நடந்தது. இறுதியில் முனைவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி என அறிவிக்கப்பட்டது.
திருச்சி தேசியக் கல்லூரியின் துணை முதல்வர் மற்றும் உடற்கல்வியியல் துறை இயக்குநர் பிரசன்ன பாலாஜி வழிகாட்டுதலின் கீழ் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. உடற்கல்வி செயல்பாடுகள் பள்ளிக் குழந்தைகளின் முழுமையான வளர்ச்சிக்கு எவ்வாறு உதவுகின்றன. கணினிசார் நுண்ணறிவுத் தொழில்நுட்பம் கற்றலுக்கு எவ்வாறு உதவுகிறது என்பதை இந்த ஆய்வு பகுப்பாய்வு செய்தது. .


