சஹாரன்பூர்: காஷ்மீரின் ஸ்ரீநகரில் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் ஏராளமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தது. இது தொடர்பாக போலீசார் சமீபத்தில் வழக்கு பதிவு செய்தனர். சிசிடிவி பதிவுகள் அடிப்படையில் அந்த போஸ்டர்களை ஒட்டியது அனந்த்நாக்கை சேர்ந்த டாக்டர் ஆதில் அகமது என்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டவர் உபி மாநிலம் சஹாரன்பூரில் பணியாற்றுவதை போலீசார் கண்டறிந்தனர். உள்ளூர் காவல்துறை மற்றும் சிறப்பு நடவடிக்கை குழுவின் உதவியுடன் ஆதில் அகமதுவை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஸ்ரீநகர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
+
Advertisement

