சென்னை: மிரட்டலின்பேரில் ஜாய் கிறிசில்டாவை 2வது திருமணம் செய்ததாக மாதம்பட்டி ரங்கராஜ் விளக்கம் அளித்தார். மகளிர் ஆணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நான் எந்த ஒப்புதலையும் கொடுக்கவில்லை. மகளிர் ஆணையத்தின் பரிந்துரை உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்வேன். டி.என்.ஏ. சோதனை மூலம் குழந்தை என்னுடையது என்று நிரூபித்தால் கவனித்துக் கொள்வேன். மகளிர் ஆணைய விசாரணையின்போது ஜாய் கிறிசில்டா மாதம் ரூ.1.5 லட்சம் பராமரிப்பு தொகை வேண்டும் என்று கேட்டார். தனது பிஎம்டபிள்யூ காருக்கு ரூ.1.25 லட்சம் இஎம்ஐ செலுத்த வேண்டும் என்றும் ஜாய் கிறிசில்டா கேட்டிருந்தார்ஜாய் கிறிசில்டாவின் கோரிக்கையை விசாரணையின்போது நான் ஏற்கவில்லை. டிஎன்ஏ பரிசோதனையை நான் ஒருபோதும் மறுக்கவில்லை என்று கூறினார்.
+
Advertisement
