அவனியாபுரம்: தேனி செல்வதற்காக சென்னையிலிருந்து நேற்று வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திடம், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அவற்றுக்கு எந்த பதிலும் அளிக்காமல் அவர் சென்ற நிலையில், பின் தொடர்ந்த செய்தியாளர்கள், ‘‘வரும் ஜனவரியில், நீங்களும் திமுகவில் இணைய இருப்பதாக ஒரு வதந்தி பரவுகிறதே’’ என கேட்டபோது, ‘‘வதந்தி தானே’’ என பதில் அளித்தார். பின்னர், ‘‘நாட்டில் உள்ள அசுத்தமான நகரங்கள் பட்டியலில், மதுரை முதலிடம் பிடித்துள்ளதே’’ என்ற கேள்விக்கு ‘‘அதை அவர்களிடம் தான் போய் கேட்க வேண்டும்’’ என கூறிவிட்டு சென்றார்.
+
Advertisement

