சென்னை: சாலை விபத்தில் உயிரிழந்த மூன்று திமுக உறுப்பினர்கள் குடும்பத்தினருக்கு திமுக சார்பில் ரூ.30 லட்சம் நிவாரண நிதியை முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சாலை விபத்தில் மரணமடைந்த திருவாரூர் மாவட்டம் எம்.விக்னேஷ் - கடலூர் மேற்கு மாவட்டம் குப்புசாமி மற்றும் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் கே.ஏ.ராம்பிரசாத் ஆகிய மூன்று குடும்பத்திற்கும் தி.மு.க. சார்பில் தலா ரூ.10 லட்சம் வீதம் மொத்தம் ரூ.30 லட்சம் குடும்ப நிவாரண நிதியாக வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 6 திமுக உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு ரூ.60 லட்சம் வழங்கப்பட்டுள்ளது என முதல்வர் தெரிவித்துள்ளார்.
+
Advertisement