சென்னை: கந்தவர்கோட்டை, பண்ருட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சந்தித்து பேசினார். புதுக்கோட்டை மாவட்டம் கந்தவர்கோட்டை, கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகளை தனித்தனியே சந்தித்து பேசினார். இதில் தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் பங்கேற்றனர்.
அவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது சட்டப்பேரவை தொகுதி நிலவரம் குறித்து கேட்டறிந்தார். மேலும் கட்சி வளர்ச்சி பணி, ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் தொடர்பான விவரங்களையும் கேட்டறிந்தார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தன்னை சந்தித்த அனைத்து நிர்வாகிகளுக்கும் புத்தகங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.